கட்டளைச் சட்ட மேலாண்மைச் சபை
දකුණු පළාත් සභාවේ නීති සම්පාදන ක්රියාதென் மாகாண சபையின் நீதி வழங்குகின்ற செயற்பாட்டினை நடாத்துவது கட்டளைச் சட்ட மேலாண்மைச் சபையின் மூலமாகும்.அதன் பிரகாரம் உரிய விடயப் பொறுப்பு அமைச்சரின் ஆலோசணையின் பேரில் அமைச்சின் செயலாளருக்கு உரிய நிறுவனத்தின் தலைவர் மூலம் கட்டளைச் சட்ட மசோதாவாக்கப்படும்.அதன் பின்னர் அமைச்சரினால் மசோதாவாக முன் வைக்கப்பட்ட உப குழுவிற்கு முன் வைத்து மேற்பார்வையினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், மாகாண சபை அமைச்சரவையின் அனுமதியினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் , அமைச்சரின் மூலம் மத்திய அரசாங்கத்தின் மாகாண சபைகள் அமைச்சசிற்கு சமர்ப்பிக்கப்பட்டு, நீதிபதியின் ஆலோசணையினைப் பெற வேண்டும்.மும்மொழிகளிலும், ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டளைச் சட்ட மசோதா பிரதான செயலாளரின் மூலம் ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்பட்டு மாகாண சபைக்கு சமர்ப்பிப்பதற்காக முதலாவது சிபாரிசினைப் பெற்றுக் கொள்ளும்.
உரிய அமைச்சின் செயலாளரின் மூலம் மாகாண சபை அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டளைச் சட்டம் நீதி மேலாண்மைச் சபையின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மும்மொழிகளிலும், ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டளைச் சட்ட மசோதா மீண்டும் மாகாண அமைச்சரவைக்கு முன்வைத்து அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மாகாண சபை நிகழ்ச்சி நிரலிற்கு உள்ளடக்குவதற்கு 10 நாட்களுக்கு முன்னர், வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட வேண்டும்.உரிய அமைச்சின் செயலாளர் மூலம் மும்மொழிக்கும் உரிய பிரதிகளின் அளவினை கவுன்சில் செயலாளருக்கு முன் வைத்து மாகாண சபையின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.கவுன்சில் மூலம் கட்டளைச் சட்ட மசோதா அனுமதிக்கப்பட்டதன் பின்னர்,தலைவரினால் அது சம்பந்தமாக ஆளுநர் அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கவுன்சில் செயலாளருக்கு அறிவிக்க வேண்டும். கவுன்சில் செயலாளர் மூலம் ஆளுநரின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆளுநர் அவர்கள் அனுமதித்ததன் பின்னர் அது சட்டமாக மாறும்.கௌரவ அமைச்சர் அவர்களின் கையொப்பத்துடன் வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்படும்.
தென் மாகாண சபையின் நிலையியற் கட்டளை இலக்கம் 92 இன் கீழ் கட்டளைச் சட்ட கட்டளைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 13 ஆவது அரசியல் அமைப்புச் சட்ட சீர்த்திருத்தத்தின் படி மாகாண சபைப் பட்டியல் மூலம் மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள விடயத் துறை தொடர்பில் தென் மாகாண சபையின் நீதி வழங்கல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது கட்டளைச் சட்ட மேலாணமைக் குழுவின் மூலமாகும். மாகாண சபையின் அனுமதியுடன் எந்தவொரு மந்திரிக்கும் தனிப்பட்ட மந்திரி கட்டளைச் சட்டத்தினை முன் வைப்பதனை மேற்கொள்ளலாம்.கட்டளைச் சட்ட மேலாண்மைச் சபை 07 அங்கத்தவர்களைக் கொண்டதாகும்.
செயற்பாடுகள்
செயற்பாடுகள்
01. ஏதேனும் விடயம் தொடர்பில் அவ்விடயப் பொறுப்பு அமைச்சரினால் மாகாண சபையின் அனுமதியுடன் முன்வைக்கப்படுகின்ற சட்ட மசோதா ,சட்டங்கள் மற்றும் சட்ட கட்டளைக் குழுவில் கலந்துரையாடி உரிய செயற்பாடுகளைப் பின்பற்றி மாகாண சபையின் அனுமதியினைப் பெற்றுக் கொடுத்தல்..
02. ஏதேனும் ஒரு விடயம் தொடர்பில் தற்போதைக்கு விதிக்கப்பட்டு உள்ள சட்டங்கள் தொடர்பில் திருத்தங்களை முன் வைத்து அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தல்.
03. 08. வருடாந்த ஒதுக்கீட்டு சட்டங்களை அங்கீகரித்தல்.
சமூக நலன்கள்
சமூக நலன்கள்
01. மாகாண சபை விடயங்கள் தொடர்பாக மாகாணத்திற்கு பொருத்தமான கொள்கைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியுமாதல்.
02. மாகாண சபைக்காக ஒதுக்கப்பட்டு உள்ள விடயங்கள் தொடர்பாக மாகாணத்திற்கு பொருத்தமான வகையில் சட்ட முறையினை கட்டியெழுப்ப முடியுமாதல்.
03. மாகாண சபை விடயங்கள் தொடர்பாக மாகாணத்திற்கு பொருத்தமான விதத்தில் சட்டங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியுமாதல்.
04. சட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள தொடர்பாக தகுதியான நீதி மன்றத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியுமாதல்..