தென் மாகாண நிதி மற்றும் கணக்குகள் மீதான கட்டளைக் குழு

தென் மாகாண சபையின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் கட்டளைக் குழுக்கள் 08 செயற்படுவதோடு, அதில் ஒரு கட்டளைக் குழு நிதி மற்றும் கணக்குகள் மீதான கட்டளைக் குழு ஆகும்.இக்கட்டளைக் குழு மாகாண சபையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பண விடயங்கள் தொடர்பாக நிதி ஒழுங்குகளை ஏற்படுத்தல் , மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னிட்டு செலவீனங்களை வழங்குவதற்காக மாகாண சபையின் மூலம் வழங்கப்படுகின்ற நிதியினை ஒதுக்கீட்டுக் கணக்குகளில் காட்டப்படுகின்ற கணக்குக் கூற்று மற்றும் கட்டளைக் குழுவினால் முன்வைக்கப்படுகின்ற ஏனைய கணக்குகள் மற்றும் அவை தொடர்பாக கணக்காய்வாளர் நாயகத்தின் மேற்பார்வை அறிக்கையுடன் பரீட்சித்தல் மற்றும் உரிய சரிபடுத்தல்களுக்காக கட்டளை பிறப்பித்தல் இதன் பொறுப்பாகும்.

    செயற்பாடுகள்

01. ஒரு வருடத்திற்கான கட்டளைக் குழுக் கூட்டங்கள் 12 நடாத்தப்படுவதோடு, வருடாந்த கணக்காய்வாளர் அறிக்கையில் மொத்த மேற்பார்வை மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும்.


02. தென் மாகாணத்தின் அமைச்சுக்கள் / திணைக்களங்கள் மற்றும் மாகாண நிருவாக நிறுவனங்கள் தொடர்பில் கணக்காய்வாளர் அறிக்கையில் காட்டப்படுகின்ற கணக்காய்வுப் பந்திகள் கலந்துரையாடப்பட்டு உரிய நிறுவனத்துக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசணை வழங்கல் நடைபெறும்.


03. ஒவ்வொரு மாதமும் நான்காவது வார திங்கட்கிழமை கணக்குகள் கட்டளைக் குழு நடாத்தப்படுவதாக கட்டளைக் குழுவின் நிகழ்ச்சி நிரல் மூலம் கௌரவ அங்கத்துவ மந்திரிமார்களுக்கு அறிவிக்கப்படும்.


04. மாகாணத்தின் அமைச்சுக்கள் , திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற செலவினங்கள் தொடர்பில் நிதி ஒழுங்கு ஒன்று ஏற்படுத்தப்படும்.

    සசமூக நலன்கள்

01. தென் மாகாண சபைக்கு உரித்தான நிறுவனங்களில் நடாத்திச் செல்லபடுகின்ற நிதி சிக்கல்கள் தொடர்பில் கட்டளைக் குழுக்கள் மூலம் கலந்துரையாடி அவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுத்தல்.


02. மாகாண சபைகள் மூலம் நிருவகிக்கப்படுகின்ற நிறுவனங்களின் அலுவல்களை மேற்கொள்ளும் போது நிதி ஒழுங்குகளை இதன் மூலம் ஏற்படுத்தல்.