விளிப்புக் கட்டளைக் குழு

மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அல்லது வேறு நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாகாண சபை விடயத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித் திட்டங்களில் வினைதிறன் மற்றும் ஆக்கத் திறனை மேம்படுத்தல் மற்றும் வீண் விரையத்தினைத் தடுத்துக் கொள்ளல் தொடர்பில் உரிய அமைச்சருக்கு சிபாரிசினை முன்வைத்தல் இக்கட்டளைக் குழுவின் மூலம் நடைபெறும். அதன் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக மந்திரிமார்களின் மற்றும் பொது மக்களின் முறைப்பாடுகள் அல்லது ஏதேனும் தகவல் தொடர்பில் பரீட்சித்துப் பார்த்து முக்கியமானதென தீர்மானிப்பதாயின், அதி சம்பந்தமாக உரிய அமைச்சரை தெளிவுபடுத்தல் இதன் மூலம் நடைபெறும்.

    செயற்பாடுகள்

*. மாகாண சபையின் கீழ் செவை ஆற்றுகின்ற எந்தவொரு நபர் அல்லது மாகாண சபைகள் விடயம் தொடர்பில் அலுவல்களை மேற்கொள்கின்ற எந்தவொரு உத்தியோகத்தர், பதவி வகிப்பவர்,மாகாண சபையின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற அல்லது வேறு நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாகாண சபை விடயத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்ச்சித் திட்டங்கள் அல்லது நிறுவனங்களினது அல்லது உத்தியோகத்தர், பதவி வகிப்பவர் அல்லது ஒரு நபரை அழைத்து கேள்வி கேட்பதற்கும் அறிக்கை புத்தகப் பதிவேடுகள் , வேதியியல் சோதனைகளுக்கு வரவழைத்து போன்ற ஆவணங்களை வேலைத்தளம் மற்றும் சொத்துக்கள் போன்றவற்றை பரீட்சிப்பதற்கும் அதிகாரம் உள்ளது.

    சமூக நலன்கள்

*. மந்திரிமார்களின் மற்றும் பொது மக்களிடம் இருந்து கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகள் அல்லதி ஏதேனும் ஒரு தகவல் அல்லது பரீட்சித்துப் பார்த்து தேவையான தீர்மானம் எடுத்தல்.