பொது மக்கள் முறைப்பாட்டு மேலாண்மைக் குழு

தென் மாகாண சபையின் நிலையான கட்டளை 96 இன் கீழ் பொது மக்கள் முறைப்பாட்டு மேலாண்மைக் குழு நிறுவப்பட்டு உள்ளது.தென் மாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்துக் கட்சிகளது மற்றும் சுயாதீனக் குழுக்களது மந்திரிமார்களின் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொது மக்கள் முறைப்பாட்டு மேலாண்மைக் குழுக்கான அங்கத்துவ மந்திரிமார்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதோடு, இம்மேலாண்மைக் குழு அங்கத்த்வர்கள் 15 பேர்களைக் கொண்டதாகும். மேலாண்மைக் குழுவின் தலைவர் மாகாண சபையின் தலைவர் மூலம் நியமிக்கப்படுவார்.மந்திரி ஒருவரின் சிபாரிசுடன் தலைவரை விளித்து,முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகள் முதன் முதலாக செயற்பாட்டு மேலாண்மைக் குழுவில் கலந்துரையாடுவதற்காக எடுத்துக் கொள்ளப்படுவதோடு,அங்கு மாகாண சபைகள் விடயத்திற்கு உரிய ஒரு விடயமாயின்,அம் மேலாண்மைக் குழுவின் அனுமதியினைப் பெற்றுக் கொடுப்பதோடு, அது மாகாண சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கி, சபைக்குள் எடுத்துக் கொள்ளப்படும்.

    செயற்பாடுகள்

01. பொது மக்கள் முறைப்பாட்டு மேலாண்மைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் உரிய விடயப் பொறுப்பு அமைச்சருக்கு அறிக்கை விடுத்தல்.


02. அவ் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பிறகு உரிய முறைப்பாடு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் முறைப்பாட்டு மேலாண்மைக் குழுவிற்கு வரவழைத்து உரிய பிரச்சினை தொடர்பில் அனைவரினதும் உடன்பாட்டுடன் சிபாரிசினை முன்வைத்தல்.


03. சமர்ப்பிக்கப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் வழங்கப்படுகின்ற சிபாரிசுகளை மாகாண சபைக்கு உள்ளடக்கியதன் பின்னர், உரிய முறைப்பாடு தொடரபான அனைத்து தரப்பினரதும் சிபாரிசினை முன் வைத்தல்.


04. சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பின் விபரத்தினை மேற்கொள்ளல்.


05. விசாரணையின் பிற்பாடு வழங்கப்படுகின்ற சிபாரிசு ஏதேனும் ஒரு தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படாவிடின், அது தொடர்பாக மீள் விசாரணை செய்தல்.

    சமூக நலன்கள்

01.மாகாணத்தில் வாழ்கின்ற மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்.


02.அரச நிறுவனங்களில் நிகழ்கின்ற தாமதக் கோளாறுகளைத் தடுத்து பொது மக்களின் பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளித்தல்.


03. இழைக்கப்படுபவர்களுக்காக பொது மக்கள் பிரதிநிதியாகத் தோன்றல்.


04. கால காலமாக தீர்வு கிடைக்கப் பெறாத பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வினைப் பெற்றுக் கொடுத்தல்.


05. பிரச்சினைகளுக்கு உரிய அனைத்து தரப்பினரையும் வரவழைத்து விசாரணை செய்வதனால் ஒரே சந்தர்ப்பத்தில் பிரச்சினைகளுக்கான திருப்திகரமான தீர்வினை வழங்க முடிந்தமை.


06.பல்வேறுபட்ட பிரச்சினைகளின் போது சட்ட ரீதியாக செயற்படும் போது செலவாகின்ற பணம்,காலம்,சிரமம் இதன் போது எஞ்சுகின்றது.


07. அரச நிறுவனங்களில் நிகழ்கின்ற செயற்பாடுகளற்ற மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நடக்கின்ற அநீதிகள் தொடர்பாக அனைத்து தரப்பினரையும் வரவழைத்து விசாரணை செய்து சிபாரிசினைப் பெற்றுக் கொடுத்தல்.