03. தென் மாகாண சபை பொது வசதிகள் தொடர்பான கட்டளைக் குழு

தென் மாகாண சபையின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் கட்டளைக் குழுக்கள் 08 செயற்படுவதோடு, அதில் ஒரு கட்டளைக் குழு பொது வசதிகள் தொடர்பான கட்டளைக் குழு ஆகும். இக்கட்டளைக் குழுவின் மூலம் தென் மாகாண சபையின் கௌரவ அமைச்சர்கள் மந்திரிமார்களின் சலுகைகள் மற்றும் வசதிகளைப் பாதுகாத்தல் மற்றும் பெற்றுக் கொடுத்தல் போன்றன நடைபெறுகின்றன.

    செயற்பாடுகள்

01. ஒரு வருடத்திற்காக மேலாண்மைக் குழுக் கூட்டங்கள் ஏறத்தாழ 06 மாத்திரம் நடாத்தப்படும்.


02. மாகாண சபையின் தலைவர் மூலம் இம்மேலாண்மைக் குழுவின் தலைவர் பதவியினை வகிப்பதோடு, இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை மாத்திரம் கூட்டம் ஒன்று நடாத்தப்படும். தலைவர் உட்பட அங்கத்தவர்களான கௌரவ மந்திமார்கள் 07 பேர்கள் அங்கத்துவப் பதவி வகிப்பர்.


03. மாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் மந்திரிமார்களின் மூலம் அவர்களுடைய வசதிகள் தொடர்பில் தோன்றுகின்ற பிரச்சினைகள் இம்மேலாண்மைக் குழுவின் மூலம் தீர்த்துக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    சமூக நலன்கள்

01. தென் மாகாண அமைச்சர்கள் மந்திரிமார்களின் சலுகைகள் மற்றும் வசதிகள் தொடர்பாகக் காணப்படுகின்ற பிரச்சினைகளை கட்டளைக் குழுவின் மூலம் கலந்துரையாடி அவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுத்தல்.


02. மந்திரிமார்களின் சலுகைகள் மற்றும் வசதிகள் தொடர்பாக கட்டளைக் குழுவிற்கு விடயங்களை முன்வைத்ததன் பிற்பாடு கௌரவ ஆளுநர் அவர்களின் அனுமதியின் பின்னர் அதன் சலுகைகள் செயற்பாட்டு வசதிகள் மேற்கொள்ளப்படும்.