தென் மாகாண சபை வரலாற்றின் விஷேட நிகழ்வாக இடம்பெற்ற விடயமாக தென் மாகாண சபைகளைக் குறிப்பிடலாம்.1993 ஆம் ஆண்டு மே மாதம் இடமபெற்ற இரண்டாவது மாகாண சபைத் தேர்தலில் பொது மக்கள் ஐக்கிய முன்னணிக்கு 22 மந்திரிமார் ஆசனங்களும் சனநாயக சோஷலிச ஐக்கிய தேசிய முன்னணிக்கு 6 ஆசனங்களும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 27 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன.கடும் போராட்டத்தின் பின்னர் பொது மக்கள் ஐக்கிய முன்னணியின் அமரசிரி தொடங்கொட அவர்களுக்கு பிரதான அமைச்சுப் பதவியினை வெற்றி பெற முடிந்தது.காணப்பட்ட மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கை ஒன்றே மாத்திரம் ஆகும்.


1994 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தினை அங்கீகாரம் செய்து கொள்ளுகின்ற தினத்தில் பொது மக்கள் ஐக்கிய முன்னணியின் அங்கத்தவரான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மாகாண சபை மந்திரி விமல் பிரெண்ஸிஸ்கு அவர்கள் சபைக் கூட்டத்திற்கு சமுகமளிக்கவில்லை.அதன் மூலம் முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினை வெற்றியினைத் தீர்மானிக்கக் கூடிய வாக்காக அந்நிர்வாகத்திற்கு கிடைக்காமல் போனமையே ஆகும்.வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது.மாகாண சபையின் பொது மக்கள் ஐக்கிய முன்னணியின் நிர்வாகம் தோல்வி அடைந்தது.மாகாண சபை கலைக்கப்பட்டது.இதன் காரணமாக 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி தென் மாகாண சபைக்கான இடைக்காலத் தேர்தல் நடாத்த அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டது.

1994.03.24 ஆம் திகதி நடாத்தப்பட்ட இடைத் தேர்தலின் பெறுபேறுகளின் அடிப்படையில் 1994.04.08 ஆம் திகதி தென் மாகாண சபையின் மூன்றாவது சபையின் நிகழ்வு இடம் பெற்றதோடு,அச்சந்தர்ப்பத்தில் லெஸ்லி மர்வின் ஜயரத்ன அவர்கள் கௌரவ ஆளுநராக பதவி நியமனம் பெற்றார். கௌரவ பிரதான அமைச்சுப் பதவிக்கு கெளரவ அமரசிரி தொடங்கொட அவர்கள் நியமனம் பெற்றார். மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் கௌரவத் தலைவராக செயற்பட்டதோடு, பின்னர் நெவில் தீஸியஸ் தர்மபால கனகரத்ன அவர்கள் கௌரவ ஆளுநர் பதவிக்கும், மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் கௌரவ பிரதான அமைச்சுப் பதவிக்கும், கௌரவத் தலைவர் பதவியினை குணசோம விக்கிரமசிங்ஹ அவர்களும் நியமிக்கப்பட்டனர். 1999.04.07 ஆம் திகதியுடன் தென் மாகாண சபையின் மூன்றாவது மாகாண சபையின் காலம் முடிவடைந்தது.


1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அமைத்துக் கொள்ளப்பட்ட ஆட்சி அமைக்கும் அதிகாரம் 1994 ஆம் ஆண்டில் பொதுஜன முன்னணிக்கு கிடைக்கப்பெற்றது. இவ்வதிகாரம் சனநாயக முறை மாற்றமடைந்த ஒரு கேந்திர மையமாகக் கருதலாம்.

தென் மாகாண சபையின் நான்காவது மாகாண சபைத் தேர்தல் 1999.06.10 ஆம் திகதி நடாத்தப்பட்டதோடு, அப்போது கௌரவ ஆளுநர் பதவியினை வகித்தது நெவில் தீஸியஸ் தர்மபால கனகரத்ன அவர்களே ஆவார்.கௌரவ பிரதான அமைச்சுப் பதவியினை மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் வகித்ததோடு,எச்.ஜீ.சிரிசேன அவர்கள் கௌரவ தலைவர் பதவியினை வகித்தார்.அதன் பின்னர் கௌரவ ஆளுநர் பதவியினை ஒழுங்கு முறையே தஸநாயக்க அவர்கள் மற்றும் கிங்ஸிலி திஸ்ஸ விக்கிரமரத்ன அவர்கள் நியமிக்கப்பட்டதோடு,கௌரவ பிரதான அமைச்சுப் பதவியினை எச்.ஜீ.சிரிசேன அவர்கள் கௌரவ தலைமைத்துவப் பதவிக்கு ஷான் விஜயலால் த சில்வா அவர்களும் நியமிக்கப்பட்டனர்.இந்நான்காவது மாகாண சபையின் பதவிக் காலம் 2004.05.05 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.


2004.07.10 ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தலின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட தென் மாகாண சபையின் ஐந்தாவது மாகாண சபையின் கௌரவ ஆளுநர்களாக ஒழுங்கு முறைப்படி கிங்ஸிலி திஸ்ஸ விக்கிரமரத்ன அவர்கள் மற்றும் நெரஞ்சலா புஷ்பகுமாரி பாலசூரிய அவர்கள் பதவி வகித்ததோடு,கௌரவ பிரதான அமைச்சுப் பதவியினை ஷான் விஜயலால் த சில்வா அவர்களால் மற்றும் கௌரவ தலைமைப் பதவியினை ஐ. விஜேவந்த அவர்களும் வகித்தார்கள்.2009.08.03 ஆம் திகதியுடன் ஐந்தாவது மாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைந்தது.

தென் மாகாண சபையின் ஆறாவது மாகாண சபைத் தேர்தல் 2009.10.10 ஆம் திகதி நடாத்தப்பட்டது. அப்போது கௌரவ ஆளுநர் பதவியில் நெரஞ்சலா புஷ்பகுமாரி பாலசூரிய அவர்கள் பணிபுரிந்ததோடு, ஷான் விஜயலால் த சில்வா அவர்கள் கௌரவ பிரதான அமைச்சுப் பதவியிலும் மொஹான் பீ. த சில்வா அவர்கள் மற்றும் கே.ஏ.சோமவங்ச போன்ற மந்திரிமார்கள் ஒழுங்கு முறைப்படி கௌரவ தலைமைத்துவப் பதவிகளை வகித்திருந்தார்கள். இவ் ஆறாவது மாகாண சபையின் பதவிக் காலம் 2014.01.12 ஆம் திகதி முடிவடைந்தது.


2014.03.29 ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தல் முடிவுகளின் பேரில் தென் மாகாண சபையின் ஏழாவது மாகாண சபைகள் அமைக்கப்பட்டதோடு,அதில் ஒழுங்கு முறையாக நெரஞ்சலா புஷ்பகுமாரி பாலசூரிய அவர்கள்,கலாநிதி ஹேமகுமார நானாயக்கார அவர்கள்,சனாதிபதி சட்டத்தரணி மாஷல் பெரேரா அவர்கள்,ரஜித் கீர்த்தி தென்னகோன் அவர்கள் கௌரவ ஆளுநர் பதவிகளை வகித்தார்கள்.


தென் மாகாண சபையின் முதலாவது சபைக் கூட்டம் காலி மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் அவ்வருடத்திலேயே காலி ஹில்டொப் வளாகத்தில் நடாத்தப்பட்டதோடு,2008 ஆம் ஆண்டில் தென் மாகாண சபையின் மாகாண சபைக் கூட்டத்தினை நடாத்துவதற்காக அதற்காகவே ஒதுக்கப்பட்ட கலேகானையில் அமையப் பெற்றுள்ள கவுன்சிலர் செயலக கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.